கோலாலம்பூர், ஆக. 4 –
ஒரு தவிர்க்க முடியாத தொடரில் பயணம் மற்றும் இரசனையை இணைக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரசிக்க ருசிக்க ரீலோடட் என்ற உணவு பயணத் தொடரின் சீசன் 8 முதல் ஒளிபரப்பை அனைத்து மலேசியர்களும் ஆகஸ்டு 8 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு களிக்கலாம்.
வழக்கமான உணவு வகைகளைக் காண்பிப்பதைக் கடந்து, இந்தத் தொடர் உணவு ஆர்வலர்களின் உணர்வுகளுக்கு நிச்சயமாக ஒரு விருந்தாக அமையும்.
பி.ஜி.டபல்யு என்று அன்பாக அழைக்கப்படும் பன்முகத் திறமை கொண்டப் பால கணபதி வில்லியமால் இயக்கி, தயாரித்து மற்றும் தொகுத்து வழங்கப்படும் ரசிக்க ருசிக்க ரீலோடட் சீசன் 8, ரசிக்க ருசிக்க சீசன்களின் வரலாற்றிலே முதன்முறையாக மலேசியா முழுவதுமான கருப்பொருள் சார்ந்த சுவையான உணவுகளைச் சித்தரிக்கிறது.
இந்த 26 அத்தியாய உணவு பயணத் தொடர், சாலையோர உணவு கடைகளில் கிடைக்கும் மலிவான உணவுகள் முதல் ஆடம்பரமான சிறந்த உணவகங்களில் வழங்கப்படும் ஆடம்பர பிரீமியம் உணவுகள் வரை பல்வேறு வகையான சுவையான உணவுகளைச் சித்தரிக்கும்.
மலேசியாவின் பிரியமான தேசிய உணவான நாசி லெமாக் முதல் சைவ மற்றும் அசைவ உணவுகள், சீஸ் உணவுகள், இரவு உணவுகள், சுவையான நாசி கண்டார், நறுமண வாழை இலை உணவுகள், நாவில் நீர் ஊறும் பர்கர் வகைகள், சுவையான கடல் உணவுகள், தனித்துவமான பிரியாணி வகைகள், வளமான பன்முக நூடுல்ஸ் வகைகள், வறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் பலவற்றை அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கலாம்.
ரசிக்க ருசிக்க ரீலோடட் சீசன் 8-இன் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.
ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99*-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99* கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும். மேல் விபரங்களுக்கு www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

