Homeஅரசியல்சபாநாயகரின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதில் பெர்சத்து தோல்வி! 

சபாநாயகரின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதில் பெர்சத்து தோல்வி! 

கோலாலம்பூர், ஆக. 4-

2023 ஜனவரி 16ஆம் தேதி பெர்சத்துவிலிருந்து விலகிய நால்வரின் எம்பி தொகுதிகளை காலியாக அறிவிக்கத் தவறிய சபாநாயகர் ஜொகாரி அப்துலின் முடிவை எதிர்த்து முறையீடு செய்ய அனுமதி கோரிய மனுவில் பெர்சத்து கட்சி தோல்வியைத் தழுவியது.

நாடாளுமன்ற சபாநாயகரின் முடிவை எதிர்க்க அரசமைப்புச் சட்டம் இடம் தராததால், சபாநாயகரின் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய பெர்சத்துவிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே என்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

பெர்சத்துவின் எம்பிக்களான அர்மிஸான் முகமட் அலி, கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான், ஜொனாதன் யாசின் மற்றும் மாத்பாலி முசா ஆகியோர் பெர்சத்துவின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், அதிலிருந்து விலகி பிரதமர் அன்வாருக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது சட்டப்படி குற்றம் என்றும் அவர்களின் எம்பி இருக்கைகளை காலியாக அறிவிக்க வேண்டுமென்றும் பெர்சத்து நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more