கோலாலம்பூர், ஆக.5-
நாட்டில் 10 இடங்களில் வெப்பத்தின் காரணமாக நீர் தொடர்பான நடவடிக்கைகள் தடைபடும் அபாயம் நிலவுவதாக துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.
கெடாவில் உள்ள பண்டார் பாரு, பேராக்கில் உள்ள செலாமா, பகாங்கில் உள்ள தெமர்லோ,சரவாக்கில் உள்ள லிம்பாங், சபாவில் தெனோம் மற்றும் பித்தாஸ் ஆகிய பகுதிகளில் வெப்பத்தின் அளவு 35லிருந்து 37 செல்சியஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுமையும் மழை குறைவாகப் பொழிவதோடு அந்த நிலைமை அக்டோபர் முடியும் வரை தொடரும் என்பதாலும், மக்களுக்கு நீரளிப்பு சேவையில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என கணிக்கப்படுகிறது.
எனவே, இந்த அசாதாரண ஆபாயத்தைச் சமாளிக்க வானிலை இலாகா, அரச மலேசியா ராணுவம் ஆகியவற்றின் உதவியோடு ஆங்காங்கு செயற்கை மழை பொழிய வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
-பொன் முனியாண்டி


