Homeஅரசியல்அமைதிப் பேச்சு: அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி பாராட்டு

அமைதிப் பேச்சு: அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி பாராட்டு

கோலாலம்பூர், ஆக.4-

அண்மையில் தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, அவ்விரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வர முக்கிய பங்காற்றிய பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டது.

13ஆவது மலேசிய திட்டம் சம்பந்தமான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பெர்சத்துவின் துணைத் தலைவர் ஹம்சா ஸைனுடினின், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வித்திட்ட அன்வாரின் நடவடிக்கையை சிலாகித்துப் பேசியதோடு இந்த நடவடிக்கையானது நாட்டின் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் என்றும் பாராட்டியுள்ளார்.

ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும் மலேசியா, தொடர்ந்து ஆசியான் நாடுகளுக்கிடையேயும் உலக நாடுகளுக்குள் எழும் பிரச்சினைகளிலும் தலையிட்டு சமரசம் பேசி, அமைதியை நிலை நாட்ட வேண்டுமென்றும் ஹம்ஸா கேட்டுக் கொண்டார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more