Homeமலேசியாநஜிப்பின் வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு  ஏன்?

நஜிப்பின் வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு  ஏன்?

கோலாலம்பூர், ஆக. 7-

முன்னாள் பேரரசர் நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட கூடுதல் மன்னிப்பு அரசாணையை அமல்படுத்தத் தவறிய அரசை விமர்சித்திருக்கும் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லாவின் மீது நீதிமன்ற அவமதிப்பு மேற்கொள்ளப்படும் என்பது சர்வாதிகாரப் போக்கு என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

முன்னாள் பேரரசர் சுல்தான் அப்துல்லா, நஜிப் ரசாக்கிற்கு கூடுதல் அரச மன்னிப்பை வழங்கிய நிலையில், அந்த உத்தரவை அமல்படுத்தாத அரசை ‘நாஜி அரசு’ என்று விமர்சனம் செய்திருக்கும் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லாவின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் அறிவித்த செயலானது சர்வாதிகாரம் என்றும் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும் அறைகூவல் விடுக்கப்படுகிறது.

நீதியை நிலைநாட்ட பாடுபடும் வழக்கறிஞர்கள் மீது இது போன்ற அச்சுறுத்தும் அராஜக நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான நீதி கிடைப்பதைத் தடை செய்யும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more