ஜொகூர் பாரு , ஆக. 15-
இஸ்லாமி நாடு என்ற பயங்கரவாத அமைப்பிற்கு உறுப்பினர்கள் சேர்க்க உதவி செய்த வங்காளதேசிகள் இருவர் மீது ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
2023 ஜூலை 28முதல் 2024 ஏப்ரல் 30 வரை, மாட் மாமுன் அலி சஹிபுலா இஸ்லாம் எனும் பெயரில் முகநூலின் வழி உறுப்பினர்களைச் சேர்க்க உதவியதாக 27 வயது ராஃபாட் பிஷாட் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஜொகூர், லார்க்கின் தொழிற்பேட்டையில் 15 தீவிரவாதக் குழுக்களின் கொடிகள், ஒரு கைப்பேசி ஆகியவற்றை வைத்திருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும் மற்றுமொரு நபருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது.
இவ்விருவரின் மீதான வழக்கின் இரண்டாம் கட்ட வாசிப்பு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி அமாட் கமால் அரிஃபின் இஸ்மாயில் தெரிவித்தார்.
-பொன் முனியாண்டி


