Homeமலேசியாஅரச மன்னிப்பு மூலம் பிரதமர் பதவிக்கு அன்வார் தகுதியானார் ! 

அரச மன்னிப்பு மூலம் பிரதமர் பதவிக்கு அன்வார் தகுதியானார் ! 

கோலாலம்பூர், ஆக.16-

2018ஆம் ஆண்டு அன்வார் இப்ராஹிமிற்கு பேரரசர் தலைமையிலான மன்னிப்பு வாரியம் வழங்கிய முழு மன்னிப்பானது பிரதமர் பதவியை ஏற்க அவருக்கு எல்லாத் தகுதியையும் வழங்கி இருப்பதாக நாட்டின் பிரபல வழக்கறிஞரான பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் சாட் சலீம் ஃபாருக்கி கருத்து தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு விதி 48(1)இன் கீழ் அன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பானது, இதற்கு முன்னர் அவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து விதமான தண்டனையையும் ரத்து செய்திருப்பதோடு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கவும் பிரதமராகப் பதவி வகிக்கவும் அதிகாரத்தை வழங்கி இருப்பதாகவும் டாக்டர் சாட் சலீம் ஃபாருக்கி சுட்டிக் காட்டியுள்ளார்.

மேற்கண்ட அரசமைப்பு விதியானது அன்வார் சம்பந்தப்பட்ட எல்லா கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்திருப்பதோடு அந்தக் குற்றச் சாட்டுகளின் பேரில் எதிர்காலத்தில் தொடுக்கப்படும் வழக்குகளில் இருந்தும் விலக்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more