பட்டர்வொர்த், ஆக. 16-
பினாங்கு மாநிலத்தில் வர்த்தகர் ஒருவர் தேசிய கொடியைத் தலைகீழாகத் தொங்க விட்ட சம்பவம் அம்னோ- ஜசெகவுடனான உறவில் விரிசலை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
அந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்தி கண்டித்துள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான டாக்டர் அக்மால் சாலே, அதற்கு ஜசெகதான் காரணம் என கூறி, அக்கட்சியைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, ஜசெக தலைவர்கள், அவரை அடக்கி வைக்க வேண்டுமென ஜசெக நெருக்குதல் தொடுத்துள்ளது.
இந்நிலையில், அம்னோவிற்கும் ஜசெகவிற்குமான உறவு சுமுக நிலையில் இருந்தாலும், அக்மால் சாலே இந்த விவகாரத்தில் பொறுப்பற்ற தனத்தோடு செயல்படுவதாகவும் அவரின் நடவடிக்கைகள் யாவும் மடானி அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கெடுக்கும் விதமாக இருப்பதால், அம்னோ தலைவர்கள் அவரின் அடாவடித்தனமான குற்றச்சாட்டுகளை அடக்கி ஒடுக்க வேண்டுமென ஜசெக அறிவுறுத்தியுள்ளது.
-பொன் முனியாண்டி


