Homeசமூகம்பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவாக உருமாறியதற்கு நஜீப் தான் காரணம்: டத்தோஸ்ரீ சரவணன்

பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவாக உருமாறியதற்கு நஜீப் தான் காரணம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவாக உருமாறியதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தான் காரணம் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் துணை தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.

பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவின் 15-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய அவர், 2010-ஆம் ஆண்டு நஜீப் தலைமையிலான அரசாங்கம் இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் முகமாக இந்தத் திட்டத்தை அறிவித்தது, அதன்பின்னர் பல்வேறு மேம்பாட்டு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன என்று குறிப்பிட்டார்.

நஜீப் தலைமையிலான அரசு இந்திய சமூகத்தின் நம்பிக்கையை வளர்க்க முக்கிய பங்கு வகித்தது. லிட்டில் இந்தியா திட்டம் அதன் ஒரு பிரதான சின்னமாக விளங்குகிறது என்று சரவணன் தெரிவித்தார்.

அவருடன் பல சமூக தலைவர்கள், உள்ளூர் வணிகர்கள் மற்றும் மஇகா பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். விழாவில் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடந்தன.

இன்றைக்கு பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியா, மலேசிய இந்தியர்களின் கலாச்சார மையமாக மட்டுமின்றி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் முக்கிய இடமாக மாறியுள்ளது என்றார் அவர்.

spot_img

latest articles

explore more