ஷா ஆலம்:
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள 2025-ஆம் ஆண்டு கார்னிவல் ப்ளூ பிரிண்ட் & i-SEED நிகழ்ச்சியில் பொது மக்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அம்மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு தெரிவித்தார்.
இந்த கார்னிவல் நவம்பர் 22-ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கோல லாங்காட்டின் பந்தாய் மோரிப் திடலில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதில் ப்ளூ பிரிண்ட் மற்றும் i-SEED தொழில் முனைவோர் கண்காட்சி-விற்பனை, அரசு மற்றும் தனியார் நிறுவன கண்காட்சி, தெக்கூன், ஹிஜ்ரா சிலாங்கூர், மாரா, எஸ்எம்இ கோர்ப், எஸ்ஐசி ஆகியவற்றின் கருத்தரங் நடைபெறும்.
மேலும், , PLATS -SME Corp வழியாகத் தொழில்நுட்ப முயற்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு விளையாட்டு, மற்றும் சமையல் போட்டிகள், இலவசச் சுகாதார பரிசோதனை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2008 முதல் 2024 வரை வறுமை ஒழிப்பு ப்ளூ பிரிண்ட் முயற்சியின் மூலம் 5,981 பேர், மற்றும் 2021 முதல் i-SEED வழியாக 567 இந்திய தொழில் முனைவோர் உதவி பெற்றுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறந்த தொழில் முனைவோருக்குப் ப்ளூ பிரிண்ட் மற்றும் iSEED ஐகோ விருதுகளும் வழங்கப்படும் என்றார் அவர்.
இந்தக் கார்னிவல் 10,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்க இலக்கு கொண்டுள்ளதாகவும் 300 பங்கேற்பாளர்கள், அதில் 40 உதவி பெற்ற தொழில் முனைவோர் தங்கள் வியாபாரத்தை அமைக்க உள்ளனர்.
அதோட்டு, இந்தக் கார்னிவல் சிறு தொழில் முனைவோரின் வருமானத்தை உயர்த்தி, சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி, நீண்ட கால வியாபார வளர்ச்சிக்கு விநியோகஸ்தர்கள் மற்றும் கொள்முதல் சங்கங்களுடன் இணைப்பை வலுப்படுத்தும் என்றார் அவர்.


