Homeசமூகம்ஒருமைப்பாட்டை வலுப்படுத்திய விழாக்கால உபசரிப்பு நிகழ்ச்சி! 

ஒருமைப்பாட்டை வலுப்படுத்திய விழாக்கால உபசரிப்பு நிகழ்ச்சி! 

செராஸ், நவ. 25-

ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுக்கும் போக்கு முதலிய நேர்மறை எண்ணங்களை விதைத்த ஒரு நிகழ்வாக அமைந்தது இங்குள்ள தாமான் மேகாவில் அண்மையில் நடைபெற்ற தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சி.

பாங்கி நாடாளுமன்றம், பலாக்கோங் சட்டமன்றம், 4ஆவது மண்டல காஜாங் நகராண்மைக் கழகம், பலாக்கோங் இந்திய சமூக தலைவர் மற்றும் தாமான் மேகா இந்திய குடியிருப்பாளர் சங்கம் இணை ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷரிசான் ஜோஹான், பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய், நகராண்மைக் கழக உறுப்பினர்கள் எட்வின், தியாகராஜன், பலாக்கோங் இந்திய சமூக தலைவர் கிறிஸ்டி, செராஸ், தாமான் மேகா இந்திய குடியிருப்பாளர் சங்கத் தலைவர் வி. நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுவையான உணவோடு இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அதிர்ஷ்ட குலுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை மேலும் மகிழ்வித்தது.

 

spot_img

latest articles

explore more