Homeமலேசியாகலை தாய்க்கு நிரந்தர இல்லம் தேவை: ஜேம்ஸ் காளிமுத்து

கலை தாய்க்கு நிரந்தர இல்லம் தேவை: ஜேம்ஸ் காளிமுத்து

பெட்டாலிங் ஜெயா:

70 ஆண்டு காலமாகச் செயல்பட்டு வரும் மலேசிய தமிழர் கலை மன்றத்திற்கு நிரந்தர இல்லம் அமைக்க வேண்டும் என்பதே எங்களின் கனவு என்று அம்மன்றத்தின் தலைவர் திரு.ஜேம்ஸ் காளிமுத்து தெரிவித்தார்.பல்வேறு மேடை நாடகங்களை அரங்கேற்றிய கலை மன்றம் இதுவரை ஒத்திகைக்குக் கூட வாடகை இடங்களில் தான் இயங்கி வருவதாக இன்று நவம்பர் 26-ஆம் தேதி ‘எதிர்கால கனவு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டிட நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

எனவே, கலைமன்றத்துக்கென ஒரு சொந்த இல்லம் அமைப்பதற்காக இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இதனைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்களின் தலைவர்களுடன் சந்திப்பு நடத்த திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கலை கட்டிடம் வாங்குவதற்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்குமாறு திரு.ஜேம்ஸ் கேட்டுக் கொண்டார்.

மேலும், இதனைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்களின் தலைவர்களுடன் சந்திப்பு நடத்த திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கட்டிடம் வருங்கால தலைமுறைகளுக்கான தமிழ் கலை வளர்ச்சிக்கான தளமாக மாறும் என்று கட்டிடக் குழு தலைவர் திரு மாரியப்பன் தெரிவித்தார்

இம்மன்றத்தின் தலைவராக இதற்கு முன்னர் பலர் இருந்தாலும், சுயமாகக் கட்டிடம் வாங்க வேண்டும் என்ற சிந்தனையை ஆழமாக வேரூன்ற செய்த திரு ஜேம்ஸ் காளிமுத்துவின் செயல்திட்டத்திற்கு திரு.மாரியப்பன் நன்றி தெரிவித்தார்.

தோட்ட மாளிகை மண்டபத்தில் நடைபெற்ற இந்த விருந்து இந்நிகழ்ச்சிக்கு புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் கலந்து சிறப்பித்தார்.

கலைத் துறையில் மூத்த படைப்பாளர்களான ஐயா திரு.கே.எஸ். மணியம், திரு.குணசேகரன் உட்பட இன்னும் பலரை ஏற்பாட்டு குழு கௌரவித்தது.

spot_img

latest articles

explore more