பெஸ்தாரி ஜெயா:
சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா யுனிசெல் பல்கலைக்கழகத்தையும் தஞ்சோங் காராங்கையும் இணைக்கும் மாநிலச் சாலை B42 கடுமையாக சேதமடைந்து, அப்பகுதி மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிருக்கு மருட்டலை ஏற்படுத்தும் சூழலில் உள்ளது.
சாலையில் ஆழமான குழிகள், சமநிலை இழந்த மேற்பரப்பு, பாதியாக உயர்ந்த நிலையில் இருக்கும் மேடுகள்,மற்றும் தெரு விளக்குகள் இல்லாத இரவு பயணம் ஆகியவை பெரிய ஆபத்தாக உள்ளன.
குறைந்த உயரம் கொண்ட வாகனங்கள் அச்சாலையில் பயணிக்கும் போது, விபத்துக்குள்ளாகும் அபாயமும் அதிகரித்துள்ளது.
உள்ளூர் மக்கள், தரமற்ற பழுதுபார்ப்பு காரணமாக சாலை விரைவில் மீண்டும் சேதமடைந்ததை குற்றம் சாட்டி, மாநில பொதுப்பணித்துறை – JKR உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்துகின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மாநிலச் சாலை B42-க்கு முழுமையான மேம்படுத்தல் அவசியம் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


