Homeசமூகம்இந்து தர்ம மாமன்றத்தின் புதிய அலுவலகம்: பொது மக்கள் நிதியுதவி வழங்க அழைப்பு

இந்து தர்ம மாமன்றத்தின் புதிய அலுவலகம்: பொது மக்கள் நிதியுதவி வழங்க அழைப்பு

அம்பாங்:

இந்து சமயம் சார்ந்த பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வரும் இந்து தர்ம மாமன்றம் தங்களுக்கென ஒரு சொந்தமான அலுவலகத்தை வாங்குவதற்கு பொது மக்களின் உதவியை நாடுகிறது.

தற்போது பிரிக்பீல்ட்ஸ்-இல் இயங்கி வரும் அலுவலகத்திற்கு மேல் 5-ஆவது மாடியில் உள்ள புதிய அலுவலகத்தை வாங்குவதற்கு சுமார் 6 லட்சம் ரிங்கிட் தேவைப்படுவதாக இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ரிஷி குமார் கூறினார்.

இந்தப் புதிய அலுவலகத்தில் 30 பேர் அமர்ந்து சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கான வசதி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில், சொந்த அலுவலகத்தை வாங்க சுமார் 3 மாதங்களே உள்ளதாகவும் பொது மக்கள் தங்களால் இயலும் நிதியுதவியை வழங்கி துணை நிற்குமாறு ரிஷி குமார் கேட்டுக் கொண்டார்.

இந்த புதிய அலுவலகம் மாமன்றத்தின் சமூக சேவை செயல்பாடுகளை விரைவாக முன்னெடுக்க பெரும் உதவியாக இருக்கும் என்றும், ரிஷி குமார் கூறினார்.

spot_img

latest articles

explore more