Homeமலேசியா3R விவகாரங்கள்: சட்டத்துறை தலைவர் உட்பட கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உத்தரவு; புதிய சட்டங்கள்...

3R விவகாரங்கள்: சட்டத்துறை தலைவர் உட்பட கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உத்தரவு; புதிய சட்டங்கள் வர வாய்ப்பு!

புத்ராஜெயா, மார்ச் 11 –

நாட்டில் இனம், மதம் மற்றும் ஆட்சியாளர் (3R) தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வரும் வேளையில், இதில் ஈடுபடுவோருக்கு எதிராகத் சட்டத்துறை தலைவர், பாதுகாப்பு படையினர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரசாங்கத் செய்தித் தொடர்பாளரும் தொடர்பு அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஃபாமி ஃபாட்சில், சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் 3R விவகாரங்கள் குறித்து எழுப்பப்பட்டு வரும் புகார்களை அரசாங்கம் தீவிரமாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.

3R தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும், அவர்கள் மீது சமரசமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய சட்டங்களில் ஏதேனும் ஓட்டைகள் இருந்தால், அவற்றை ஆய்வு செய்து திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால், எதிர்காலத்தில் இத்தகைய சிக்கல்களைத் தடுக்கப் புதிய சட்டங்களும் இயற்றப்படும்.

சமூக வலைதளங்களில் இனவாத அல்லது மதவாதத் தூண்டுதல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நாட்டின் அமைதியைக் குலைக்கும் செயல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் ஃபாமி ஃபாட்சில் மீண்டும் எச்சரித்தார்.

 

spot_img

latest articles

explore more