கோலாலம்பூர்:
நோன்பு பெருநாளை முன்னிட்டு மார்ச் 19 மற்றும் 20, மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் கனரக வாகனங்களுக்கு சாலையில் பயணிக்க தற்காலிக தடை விதிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று
அறிவித்தார்.
இக்காலக்கட்டத்தில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன், பயணத் திட்டமிடல் குறைபாடு மற்றும் அலட்சியம் காரணமாக உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் விபத்துகள் அதிகரிப்பது குறித்து அவர் சுட்டிக் காட்டினார்.
இதனைக் கருத்தில் கொண்டு, மேல் குறிப்பிட்ட தேதிகளில் கனரக வாகனங்களுக்குச் சாலைப் பயணத் தடை அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தத் தடையைக் கடுமையாக அமல்படுத்துமாறு சாலை போக்குவரத்து துறைக்கு (JPJ) தாம் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


