Homeகுற்றவியல்இடுக்காட்டில் நிர்வாணக்கோலத்தில் அநாகரிகச் செயலில் ஈடுபட்ட தம்பதியர்!

இடுக்காட்டில் நிர்வாணக்கோலத்தில் அநாகரிகச் செயலில் ஈடுபட்ட தம்பதியர்!

கோலாலம்பூர்:

இடுக்காடு ஒன்றில் ஒரு தம்பதி, நிர்வாண நிலையில் அநாகரிகமான செயலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 38 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஒரு ஆண் முழு நிர்வாணமாக முதுகைக் காட்டியபடி நிற்க, ஒரு பெண் அரைகுறை ஆடைகளுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

இவர்களைக் கையும் களவுமாகப் பிடித்த ஒரு பெண்மணி, இந்த அநாகரிகச் செயலை வீடியோ எடுத்ததோடு அவர்களைக் கடுமையாகச் சாடினார்.

அவர்கள் அந்த இடத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல என்றும் அந்தப் பெண்மணி குற்றம் சாட்டினார். “உங்களை மீண்டும் இங்கேயே பிடித்துவிட்டேன்! ஏற்கனவே பலமுறை நீங்கள் இங்கு நிர்வாணமாக இருந்திருக்கிறீர்கள்.

இறந்தவர்களை அவமதிக்கும் வகையில் இந்த இடத்தில் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்கிறீர்கள். நான் போலீசாருக்கு போன் செய்கிறேன்,” என்று அவர் ஆவேசமாகக் கூறுவது வீடியோவில் கேட்கிறது.

அந்தப் பெண்மணி அவர்களைக் கண்டித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த நபர் நிதானமாகத் தனது கால்சட்டையை அணிந்துகொள்கிறார்.

மயானம் என்பது இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் இடம் என்பதை மறந்து இவ்வாறு நடந்துகொண்டதற்காக அவர் மன்னிப்புக் கேட்டார். இருப்பினும், அந்தப் பெண்மணி அதனை ஏற்க மறுத்ததுடன், இந்த வீடியோ ஆதாரத்தை போலீசாரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் எச்சரித்தார்.

spot_img

latest articles

explore more