கோலாலம்பூர்:

அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் (FIFA), ஆசிய காற்பந்து சம்மேளனம் (AFC), விளையாட்டு தீர்ப்பாயம் (CAS) அதிரடி நடவடிக்கையால், ஹரிமாவ் மலாயா அணி 14 இடங்கள் சரிந்து 135-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மரபுவழி வீரர்கள் விவகாரத்தால், கேப் வெர்டே, சிங்கப்பூர் மற்றும் பாலஸ்தீனத்திற்கு எதிரான மலேசியாவின் வெற்றிகளை பிஃபா ரத்து செய்தது.

பீட்டர் கிளாமுவ்ஸ்கி தலைமையிலான அணியின் வெற்றிகள் 3-0 என எதிரணிகளுக்கு வழங்கப்பட்டதால், புள்ளிகள் பறிக்கப்பட்டு தரவரிசையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.