Homeகுற்றவியல்சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை: காப்பக ஊழியர் ரத்தினவேலு குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை: காப்பக ஊழியர் ரத்தினவேலு குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

அம்பாங்:

அம்பாங்கில் உள்ள இரு செஷன்ஸ் நீதிமன்றங்களில், ஐந்து சிறுவர்களுக்கு எதிராக 15 பாலியல் குற்றச்சாட்டுகளைப் புரிந்ததாக 25 வயதுடைய ரெத்தின வேலு இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நவம்பர் 2025 முதல் மார்ச் 2026 வரை ஒரு காப்பகத்தில் இழைக்கப்பட்ட இந்தக் குற்றங்களுக்காக அவருக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், தண்டனை விவரங்கள் மே 21-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

இதேவேளை, 31 வயதுடைய காப்பக உரிமையாளர் எஸ். வேலன் தன் மீதான நான்கு பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார். அவருக்கு 30,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது.

spot_img

latest articles

explore more