கோலாலம்பூர்:
எரிபொருள் மானியக் குறைப்பு போன்ற அரசியல் ரீதியான சவாலான முடிவுகளுக்கு முன்னதாகவே, அக்டோபர் மாதத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிசீலித்து வருவதாக, FMT செய்தி வெளியிட்டுள்ளது.
வலுவான பொருளாதாரம் மற்றும் ரிங்கிட் மதிப்பு உயர்வு போன்ற சாதகமான சூழலைப் பயன்படுத்தி இந்த தேர்தலை முன்னெடுக்க அவர் திட்டமிட்டுள்ளது.
ஆனால், இது குறித்த இறுதிக்கட்ட முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றன.

