ஈப்போ:
அரசாங்கத்தில் மிகப்பெரிய அங்கமாக இருந்துகொண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் – SPRM தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிராக டிஏபி இளைஞரணி வீதியில் இறங்கி போராடுவது மக்களை ஏமாற்றும் ஒரு நாடகம் என பேராக் மஇகா இளைஞரணித் தலைவர் தியாகேஷ் கணேசன் சாடியுள்ளார்.
அமைச்சரவையில் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தும், அதற்கு மாறாக வெளியே போராட்டங்களை நடத்துவது டிஏபியின் இரட்டை வேடத்தையே காட்டுகின்றது.
இத்தகைய அரசியல் வித்தைகளை நிறுத்திவிட்டு, மக்களின் உண்மையான பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறு டிஏபிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

