Homeஅரசியல்நெகிரி செம்பிலானில் அரசியல் நெருக்கடி; கவிழும் சூழலில் மாநில அரசாங்கம்!

நெகிரி செம்பிலானில் அரசியல் நெருக்கடி; கவிழும் சூழலில் மாநில அரசாங்கம்!

சிரம்பான்:

நிச்சயமற்ற தலைமைத்துவம் காரணமாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் மாநில சபாநாயகர் மற்றும் மாநில செயலாளரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மாநில அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மாநிலத்தில் ஒரு நிலையான அரசாங்கத்தையும் முறையான நிர்வாகத்தையும் உறுதி செய்ய விரும்புவதாக அவர் வலியுறுத்தினார்.

spot_img

latest articles

explore more