காஜாங்:

தேசிய ஐபிஎப் ற்றும் ஐபிஎப் உலு லங்காட் இளைஞர் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்யும் 7ஆவது டத்தோ சம்பந்தன் கிண்ண 9 பேர் கொண்ட  கால்பந்து போட்டி செமினி திடலில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

காலஞ்சென்ற டத்தோ சம்பந்தனின்  பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படும் வேளை, அதனை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்படுவதாகக் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் கணேஷ்குமார் சம்பந்தன் தெரிவித்தார்.

இப்போட்டியில் 16 குழுக்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும். ஒவ்வொரு குழுவும் தலா 333 ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதில் முதலாவதாக வெற்றி பெறும் குழுவுக்கு 2,500 ரிங்கிட்  ரொக்கம், கிண்ணம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும்; 2ஆவதாக வெற்றி பெறும் குழுவுக்கு 1,500 ரிங்கிட்  ரொக்கம், கிண்ணம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும்; 3ஆவதாக வெற்றி பெறும் குழுவுக்கு 1,000 ரிங்கிட்  ரொக்கம், கிண்ணம், பதக்கம் வழங்கப்படும் வேளையில், 4ஆவதாக வெற்றி பெறும் குழுவுக்கு 500 ரிங்கிட்  ரொக்கம், கிண்ணம், பதக்கம் ஆகியவை வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் குழுக்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்படும்.

ஆகையால், இந்த கால்பந்து போட்டி குறித்த மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் திரு.நினேஷ் (014-6390709), திரு.கார்த்திக் (016-6882313) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.