Homeமலேசியாமலேசியாவுக்கு நீண்டகால எரிசக்தி வழங்க ரஷ்யா ஒப்புதல்!

மலேசியாவுக்கு நீண்டகால எரிசக்தி வழங்க ரஷ்யா ஒப்புதல்!

காஸான்:

மலேசியாவுக்கு நீண்டகால அடிப்படையில் பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் நாட்டின் எரிசக்தி விநியோகத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புதுப்பிக்க வேண்டிய ஒப்பந்தங்களின் மீது சார்ந்து இருக்க வேண்டிய அவசியத்தை குறைக்கும் என அவர் கூறினார்.

இதன் மூலம் மலேசிய மக்களுக்கு நீண்டகால எரிசக்தி பாதுகாப்பு மற்றும் திட்டமிட்ட விநியோகத்திற்கான உறுதி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more