Homeசமூகம்பேராக் பணி ஓய்வு பெற்ற போலிஸ் உறுப்பினர் சங்கம் சொந்த அலுவலகக் கட்டடத்தை வாங்கியது!

பேராக் பணி ஓய்வு பெற்ற போலிஸ் உறுப்பினர் சங்கம் சொந்த அலுவலகக் கட்டடத்தை வாங்கியது!

ஈப்போ:

நாட்டின் பாதுகாப்பு படையில் சேவையாற்றி வரும் போலீஸ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பணி ஓய்வு பெற்ற போதிலும் சமுகத்திற்கு தங்களின் சேவை தொடரவேண்டும் என்ற நோக்கத்தில்
பேராக் மாநில மக்களுக்கான சமூகப் பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்கும் நோக்கில், பேராக் மாநில போலீஸ் பணி ஓய்வு பெற்ற சங்கம் அமைக்கபட்டது.

இன்று அது அதன் சேவையை மேலும் விரிவாக்க 230,000 ரிங்கிட் செலவில் தனது சொந்த அலுவலகக் கட்டடத்தை வாங்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று சங்கத்தின் தலைவர் க. புவனேஸ்வரன் கூறினார்.

சொந்த அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கனவு 2022ஆம் ஆண்டிலேயே உருவானது. உறுப்பினர்களின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் 2026ஆம் ஆண்டில் அந்தக் கனவு நனவாகியுள்ளது என்றார்.

இந்தக் கட்டடம் ஈப்போ, ஜாலான் சுல்தான் யூசுப் பகுதியில் அமைந்துள்ள விஸ்மா ஏசான் (Wisma Ehsan) கட்டடமாகும். சமூகப் பணிகளை ஒருங்கிணைத்து மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கும் மையமாக இது செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனது வெற்றிக்குப் பின்னால் சங்க உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும் இருந்ததாகக் குறிப்பிட்ட பன்னீர் செல்வம் குறிப்பாக துணைத் தலைவர் சுகுமாரன் தொடர்ந்து ஊக்கமளித்து, “உன்னால் முடியும்; நான் உன் பின்னால் இருக்கிறேன்” என்று தன்னம்பிக்கையை அளித்ததே இந்த முயற்சிக்கு வலுசேர்த்ததாக நன்றியுடன் கூறினார்.

நேற்று ஈப்போவில் உள்ள வழக்கறிஞர் நிறுவனத்தில் நடைபெற்ற புதிய கட்டடம் வாங்கியது தொடர்பாக நடைபெற்ற கையெழுத்து ஒப்பந்தம் நிகழ்விற்குப் பின்னர் இந்த தகவலைத் புவனேஸ்வரன் தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய துணைத் தலைவர் பணி ஓய்வு பெற்ற ஏ எஸ். பி. என். சுகுமாரன், பேராக் மாநில இந்திய சமுதாயத்திற்காக பல ஆண்டுகளாக சமூகச் சேவைகளை மேற்கொண்டு வரும் சங்கத்திற்கு சொந்த அலுவலகம் அவசியம் என்ற எண்ணமே கட்டடம் வாங்கும் முடிவுக்கு வழிவகுத்ததாக தெரிவித்தார்.

“மக்களுக்கான சேவைகளை இன்னும் விரிவுபடுத்தும் நோக்கில்தான் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேராக் மாநில மக்களும், அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், நன்கொடையாளர்களும் தங்களால் இயன்ற அளவில் பங்களித்து இந்த சமூகப் பணியை தொடர்ந்து முன்னெடுக்க ஆதரவு வழங்க வேண்டும்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

புதிய அலுவலகத்தின் மூலம் கல்வி, நலத்திட்டம் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேலும் திறம்பட செயல்படுத்த சங்கம் திட்டமிட்டுள்ளது.

spot_img

latest articles

explore more