கோலாலம்பூர், ஜூன் 26-
அரசியலில் தற்போதைக்கு தாம் மறுபிரவேசம் செய்யப்போவதில்லை; குறுகிய கால ஓய்வை எடுக்கப்போவதாக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் பேசிய அவர், இதுவரை நாட்டின் நலனுக்காக தமது தனிப்பட்ட வாழ்க்கையை ஒதுக்கி வைத்திருந்ததாகவும் இனி, தனிப்பட்ட வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதாகவும் கூறினார்.
“அரசியலிலிருந்து நான் பின்வாங்கவில்லை, மாறாக புதிய...
ஷா ஆலம், ஜூன் 26-
ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டுள்ள சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானிடம் தலைவர் பொறுப்பை மீண்டும் ஒப்படைக்க, மூடா கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
புதன்கிழமை நடந்த மூடா கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அக்கட்சியின் இடைக்கால தலைவர் அமிரா ஐஷா அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
சைட் சாடிக் நீதிமன்றத்தில் தனது...
கோலாலம்பூர், ஜூன் 25-
பெர்சாத்து கட்சி இளைஞர் பிரிவான அர்மாடாவின் நிதி முறைகேடு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டது தொடர்பில், அரசு வழக்கறிஞர் தரப்பு மேல்முறையீடு செய்யவுள்ளது.
கூட்டரசு நீதிமன்றத்தில், அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படுமென, அரசு வழக்கறிஞர் தரப்பு தம்மிடம் தெரிவித்ததாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர்...
புத்ராஜெயா, ஜூன் 25-
பெர்சாத்து கட்சி இளைஞர் பிரிவான அர்மாடாவின் நிதி முறைகேடு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
நம்பிக்கை மோசடி, சொத்து தவறாக பயன்படுத்தியது, பணமோசடி உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்தது.
நீதிபதிகள் அஸ்மான் அப்துல்லா, நூரின் பதருதீன் உள்பட மூவர் கொண்ட...