spot_img
11 C
London
spot_img
Home சமூகம் ஒற்றைத் தர அரிசி பரிந்துரை: இதர அமைச்சுகளுடன் விவாதிக்கப்படும்- மாட் சாபு

ஒற்றைத் தர அரிசி பரிந்துரை: இதர அமைச்சுகளுடன் விவாதிக்கப்படும்- மாட் சாபு

0
253

கப்பளா பாத்தாஸ், நவ.17-

உள்நாட்டு வெள்ளை அரிசி, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி என்று இப்போது இருப்பதைப் போல் இல்லாமல் ஒற்றைத் தர வெள்ளை அரிசியை உருவாக்கும் பரிந்துரை குறித்து சில அமைச்சுகளுடன் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாதத்திற்கான அமைச்சு கலந்துரையாடல் நடத்தும் என்று அமைச்சர், மாட் சாபு தெரிவித்தார்.

   இந்த கலந்துரையாடல் வரும் காலங்களில் நெல் சார்ந்த விவகாரங்களை ஒருங்கிணைப்பது உட்பட ஒட்டுமொத்தமான முறையில் நடத்தப்பட்டது.  

   இவ்விவகாரம் குறித்து மலேசிய அரிசி ஆலை சம்மேளனத்துடன் இணைந்து அமைச்சு கலந்துரையாடல் நடத்தவுள்ளது.

   அதோடு மட்டுமின்றி இக்கலந்துரையாடல் பொருளாதார அமைச்சு, நிதி அமைச்சு, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்கான அமைச்சு ஆகியவற்றுடனும் நடத்தப்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய போது கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினருமான மாட் சாபு குறிப்பிட்டார்.

-மலேசியா கினி