Homeஅரசியல்

அரசியல்

முன்னாள் பிரதமர் மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா காலமானார்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் மனைவியும், நாட்டின் முதல் மலாய்ப் பெண் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலி இன்று தனது 100ஆவது வயதில் காலமானார். அவர் இன்று காலை சுமார் 9.25 மணியளவில் தேசிய இருதயக் கழகத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரான டாக்டர் சித்தி ஹஸ்மா, தாய்மார் நலம், குடும்பக் கட்டுப்பாடு, எழுத்தறிவு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் மனநலம்...

மடானி அரசிலிருந்து தேசிய முன்னணி வெளியேற வேண்டும்

https://www.tiktok.com/@anegunnews/video/7690126604248321301?is_from_webapp=1&sender_device=pc&web_id=7672254420125812240 கோலாலம்பூர்: தேசிய முன்னணி மடானி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என மக்கள் சக்தி கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வலியுறுத்தினார். தற்போதைய ஒத்துழைப்பு சமூகத்துக்கும் மக்களுக்கும் பயனளிக்கவில்லை என்றும், தேசிய முன்னணி மற்றும் அம்னோ தலைவர்கள் தொடர்ந்து அழுத்தங்களுக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகி வருவதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பான தீர்மானத்தை தேசிய முன்னணியின் உயர்மட்டத் தலைமையிடம் கொண்டு சென்று...

போக்குவரத்து துறை: மலேசியா-சீனா புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோலாலம்பூர்: போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மலேசியாவும் சீனாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான விரிவான கட்டமைப்பை இந்த ஒப்பந்தம் உருவாக்குகிறது. இதில் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, கடல்வழிப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இத்துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்வதற்கும், பணியாளர்களின் திறன்களை...

இந்தியச் சமூகத்திற்கான மடானி அரசின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன: சிவமலர், குணராஜ் விளக்கம்

சிரம்பான்: இந்தியச் சமூகத்திற்காக மடானி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு, தமிழ் மொழி, ஆலயங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நேரடி நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் ஜோர்ஜ் மற்றும் கெஅடிலான் கட்சியின் மத்திய தலைமைக் குழு உறுப்பினரும் துணைப் பொதுச் செயலாளருமான சிவமலர் கணபதி தெரிவித்தனர். 2023-ஆம் ஆண்டு முதல் இந்தியச்...

2026-ஆம் ஆண்டுக்கான தேசிய பயிற்சி வாரம் திறன் மேம்பாட்டுக்கான முக்கியத் தளம்: ரமணன்

பிராய்: இளைஞர்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் தங்களின் திறன்களை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கிய தளமாக 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய பயிற்சி வாரம் (National Training Week - NTW) அமைந்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார். இந்த முயற்சி ஒரு சாதாரண பயிற்சித் திட்டம் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் தங்களது எதிர்காலத்தை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாகும் என்று...

நெகிரி செம்பிலானுக்கு ரிம30 பில்லியன் முதலீடு; 50,000 வேலைவாய்ப்புகள் – தேசிய முன்னணி தேர்தல் அறிக்கை வெளியீடு

சிரம்பான்: நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரிம30 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று தேசிய முன்னணி (BN) தனது மாநிலத் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. சிரம்பானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய முன்னணியின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 88 வாக்குறுதிகள்...