சனிக்கிழமை, அக்டோபர் 20, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல்
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஸாஹிட்டை ஆதரிக்க நீதிமன்றம் வந்திருந்தார் நஜீப்

கோலாலம்பூர், அக். 20 நிதி மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் அம்னோ தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு ஆதரவு தெரிவிக்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நீதிமன்றம் வந்திருந்தார். இன்று காலை 9.20 மணியளவில் தமது தோயோத்தா வெல்பையர் காரில் வந்திருந்தபோது, அவர் பத்திரிகையாளர்களிடம் புன்னகையுடன் கையசைத்து நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தார். ஸாஹிட் மீது 2001ஆம் ஆண்டு அம்லா எனப்படும்

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பொய் புகார் வழக்கை நிறுத்தியது ஏன்? மலேசிய இந்து சங்கம் கேள்வி

பெட்டாலிங்ஜெயா, அக். 18- தமது முதலாளியின் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதுரைவீரன் கிருஷ்ணன் என்பவர் மீது சம்பந்தப்பட்ட முதலாளியின் மனைவி பொய்ப்புகார் அளித்தார். இதனால் மதுரைவீரன் மனஉளைச்சலுக்கு ஆளாகி பின்னர் குற்றமற்றவர் என போலீசாரால் கண்டறியப்பட்டார் என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷாண் கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் பொய்ப் புகார் அளித்த அந்த மாதின் மீது வழக்கு விசாரணையில் இருந்தபோது

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஸாஹிட் கைது: வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

புத்ராஜெயா, அக்.17- அம்னோ தேசியத் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டார். அவர் வியாழக்கிழமை மதியம் 3.15 மணியளவில் கைது செய்யப்பட்டதை எம்ஏசிசி உறுதி செய்தது. யாயாசான் அகால் பூடி எனும் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிதி முறைகேடு தொடர்பில் ஸாஹிட் விசாரணை செய்யப்பட்டார். இவர் அந்த அறக்கட்டளையின் தலைவருமாவார். இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான வெ.8

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பூனையை கொன்ற விவகாரம் : கணேஷ் மீது குற்றச்சாட்டு

செலாயாங், அக். 16- 2 நபர்களுடன் சேர்ந்து ஒரு பூனையை சலவைக் கடையில் துணி உலர வைக்கும் இயந்திரத்திற்குள் திணித்ததாக 41 வயது நபர் மீது செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. குத்தகை தொழிலாளியான கே.கணேஷ் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். நீதிபதி ரஷிஹா கஸாலி முன்னிலையில் தமிழில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. ஏற்கெனவே இதே குற்றச்சாட்டிற்காக டாக்சி ஓட்டுநர் ஏ.மோகன்ராஜ் (வயது 41), பொறியியலாளர் எஸ்.சத்தியா (வயது

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மரண தண்டனைக்கு பதிலாக 30 ஆண்டு சிறை!

சண்டகான், அக்.15- மரண தண்டனையை அகற்றும் கோரிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதற்கு பதிலாக குறைந்தபட்சம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர், டத்தோ லியோ வுய் கியோங் தெரிவித்தார். பொதுவாக போதைப்பொருள் விநியோகம், மாட்சிமை தங்கிய மாமன்னர் மீது போர் தொடுத்தல், வன்முறை, கொலை, கடத்தும் போது கொலை செய்தல், துப்பாக்கி வைத்திருந்து அதைப் பயன்படுத்துதல், மரணம் ஏற்படும் வரை கற்பழித்தல், சிறார்களைக் கற்பழித்தல்

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சீபில்ட் தோட்ட மகா மாரியம்மன் கோவில் தற்காக்க அனைவரும் இணைய வேண்டும்!

ஷா ஆலம் அக் 15 - ஷா ஆலம் பழைய சீபில்ட் தோட்ட மகா மாரியம்மன் கோவில் அங்கிருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும் என ஷா ஆலம் உயர் நீதிமன்றம் கடந்த 28.-9.-2018 ஆணை பிறப்பித்துள்ளது. இன்றுடன் ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற கெடு முடிவடைந்தது. இதனால் ஆலயத்தை பாதுக்காக்க பொது மக்கள் திரண்டு வரவேண்டும் என ஆலய பாதுகாப்பு குழுவினர் கேட்டுக்கொண்டனர். வந்திருந்த பொது மக்கள் ஆலயம் காக்க

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பாங்கி நகைக்கடையில் கொள்ளை; வெ.500,000 இழப்பு

பாங்கி, அக் 13 பாங்கி அவெனியூ பேரங்காடியிலுள்ள நகைக்கடையில் 3 ஆடவர்கள் கொள்ளையடித்ததில் அக்கடையில் வெ.500,000 இழப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நேற்று மதியம் 1.47 மணியளவில் போலீசிற்கு தகவல் கிடைத்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசி அகமட் சாபிர் முகமட் யூசோப் தெரிவித்தார். அக்கடையில் இரு பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது இரு ஆடவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்திருந்த நிலையில் சுத்தியல் மற்றும் துப்பாக்கி போன்றிருக்கும்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஐவரை பலி கொண்ட விபத்து: லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

கோல கங்சார், அக். 12- ஐவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையில் போதையில் லோரியை செலுத்தியதாக டிரெய்லர் லோரி ஓட்டுநர் மீது கோல கங்சார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் முகமது ஜைடி டி எனும் 39 வயதான அந்த நபர் குற்றச்சாட்டை மறுத்தார். மாஜிஸ்திரேட் நூர் ஹிடாயா முகமது சாஆட் முன்னிலையில் நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர் குற்றச்சாட்டை வாசித்த பிறகு அவர் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்தார். கடந்த

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

எதிர்த் திசையில் லோரியைச் செலுத்தியதாக அழகேந்திரன் மீது குற்றச்சாட்டு

கோலகுபுபாரு, அக்.11- விபத்து ஏற்படும் அளவுக்கு எதிர்த் திசையில் லோரியை செலுத்தியதாக 37 வயது ஜி.அழகேந்திரன் மீது கோல குபுபாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. சுங்கை புவாயா ரவாங், டோல் சாவடி அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 432 ஆவது கிலோ மீட்டரில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இரவு 7.01 மணிக்கு அவர் இந்த குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எதிர்த் திசையில் செலுத்தப்பட்ட லோரி

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஈயக்குட்டையில் ஆடவர் சடலம்! போலீஸ் தீவிர விசாரணை

மஞ்சோங், அக்.11- ஜாலான் குவாரி தஞ்சோங் பத்து, பந்தாய் ரெமிஸ் மஞ்சோங்கில் உள்ள ஈயக்குட்டையில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆடவரின் உடல் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. பொட்டலம் போல் மடிக்கப்பட்ட நிலையில் அந்த உடல் கிடந்தது. அதன் தலையிலும் கால்களிலும் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டிருந்தது. குருவி பிடிக்கச் சென்றவர்கள் அங்கு உடல் கிடந்ததைப் பார்த்து போலீசுக்கு தகவல் கூறியதாக மஞ்சோங் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஹனிப் ஓஸ்மான் கூறினார்.

மேலும் படிக்க