ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 16, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம்
கலை உலகம்

2 நிமிட காட்சிக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்யும் ஷங்கர் !

சென்னை: இந்தியன் 2 படத்தில் 2 நிமிடம் வரும் செட்டுக்காக ஷங்கர் பெரிய தொகையை செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.2.0 படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. இந்தியன் படத்தை போன்றே இந்த படமும் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு செட் போடும் வேலை துவங்கியது என்று தகவல்கள் வெளியாகின. இந்தியன் 2 படத்திற்காக பிரமாண்ட செட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஷங்கர் படத்தில் பிரமாண்டம் இல்லை

மேலும் படிக்க
கலை உலகம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்க இருக்கும் ‘தல 59’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார். அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் அறிந்தோம். இந்நிலையில் இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. பாலிவுட்டில் வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

போனி கபூரின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் !

சென்னை, டிச.15- தல அஜித்குமார் நடிப்பில் விஸ்வசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் வெளியில், அவரின் அடுத்த இரண்டு படங்களை  ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனமான பேவியூ புராஜக்ட் எல்எல்பி (Bayview Projects LLP) நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் போனி கபூர். விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் மற்றும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்த ‘பிங்க்’ இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய்

கோலாலம்பூர், டிச 12- மெர்சல் படத்திற்காக சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ விருது லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. IARA எனப்படும் சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் என்ற அமைப்பு சர்வதேச அளவில் கலைஞர்களை கவுரவித்து வருகின்றது. நாடகம், சினிமா, இசை, தொலைக்காட்சி ஆகிய துறைகளில் மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஐஏஆர்ஏ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மெர்சல் படத்தில்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ரஜினியின் 2.0 : மலேசியாவில் 1 கோடியே 60 லட்சம் வசூல் சாதனை!

கோலாலம்பூர், டிச. 12 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் அண்மையில் திரையீடு கண்ட 2.0 திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகின்றது. மலேசியாவிலும் இத்திரைப்படம் மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. குறிப்பாக இதுவரையில் (டிசம்பர் 11) 1 கோடியே 60 லட்சம் வெள்ளியை இத்திரைப்படம் வசூலித்திருப்பதாக 2.0 திரைப்படத்தை மலேசியாவில் வெளியீடு செய்த DMY கிரியேசன்ஸ் நிறுவனம்

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

சேதுராம் சுருதிலயா பாடல் போட்டி; வெற்றியாளர்கள் தமிழகம் சென்று ஆல்பத்தில் பாட வாய்ப்பு வழங்கப்படும்!

கோலாலம்பூர், டிச.11 மலேசிய மாணவர்கள் தமிழகத்தில் சென்று இசை ஆல்பம் வெளியிடுவதும் சினிமா பின்னணிப் பாடகர்களாக உருவாவதும் நீண்ட கால கனவாக இருந்து வருகிறது. இந்த கனவை நனவாக்கும் முயற்சியில் சேதுராம் சுருதிலயா இசை மையம் களமிறங்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது என்று மனிதநேய மாமணி ரத்தினவள்ளி அம்மையார் புகழாரம் சூட்டினார். சேதுராம் சுருதிலயா இசை மையத்தின் முயற்சியில் முதன் முறையாக தேசிய அளவில் நடத்தப்பட்ட பாடல் போட்டி கடந்த சனிக்கிழமையன்று தலைநகர்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விஜய்சேதுபதி மகாநடிகன்! ரஜினிகாந்த் புகழாரம்

சென்னை, டிச 10- பேட்ட படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த நடிகர் விஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல, மகா நடிகர் என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார். பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா சாய்ராம் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசினார். அவர் பேசுகையில் பேட்ட படத்தில் சிம்ரன் ஹீரோயின் என்று சொன்னதுமே எல்லோருக்கும் ஓகே. பிளாஷ்பேக்கில் ஒரு ஹீரோயின் கேரக்டர். திரிஷா

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

வசூலில் அபார பாய்ச்சல் – ரூ. 500 கோடியைத் தொட்ட 2.0!

2.0 படம் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்தது. அதன் பிறகு அடுத்த நாளே ரூ. 200 கோடி வசூலித்தது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது 2.0. 2.0 படம் ரிலீஸான

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் – முழு விவரம் ரஜினி 14, விஜய் 26!

சென்னை, டிச. 6- இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018ஆம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

திரையரங்கில் விஸ்வாசம் மோசன் போஸ்டர் கெத்து காட்டும் மலேசிய தல ரசிகர்கள்.

கோலாலம்பூர், டிச. 5- 2019இ ல் ஜனவரி பொங்கல் ஸ்பெஷலே விஸ்வாசம் படம் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படமும் அன்றைய நாள் வெளிவருகின்றது. ஆனால் அந்த திரைப்படத்திற்கு இணையான பேராதரவை விஸ்வாசமும் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது. அஜித்தின் ரசிகர்கள் விஸ்வாசம் திருவிழா என ஹெஸ்டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக 700 க்கும் அதிகமான திரையரங்குகளில் தமிழ் நாட்டில் படம் வெளிவரவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் படிக்க