spot_img
9.4 C
London
spot_img
Home சமூகம் முதலீடு செய்யவே பணம் வழங்கினீர்கள் என்றால் கோவிலில் சத்தியம் செய்ய முடியுமா? -ஓம்ஸ் தியாகராஜனிடம் டாக்டர்...

முதலீடு செய்யவே பணம் வழங்கினீர்கள் என்றால் கோவிலில் சத்தியம் செய்ய முடியுமா? -ஓம்ஸ் தியாகராஜனிடம் டாக்டர் சத்தியபிரகாஷ் கேள்வி

0
198

கோலாலம்பூர் மே 23-

தனது நிறுவனத்திடம் ஓம்ஸ் தியாகராஜன் செலுத்திய தொகை மருத்துவ மையம் ஒன்றைக் கட்டுவதற்கான முதலீட்டுத் தொகையே என்பதை அவர் கூறுவதைக் கோவிலில் சத்தியம் செய்து நிரூபிக்க முடியுமா என்று டாக்டர் சத்தியபிரகாஷ் வினவியுள்ளார்.

இந்தத் தொகை 2 மில்லியன் வெள்ளிக்கு மருத்துவ மையம் ஒன்றை கட்டுவதற்காகத்தான் என்று அவர் கூறியுள்ளார்.

மருத்துவ மையம் ஒன்றைக் கட்டுவதற்கு 2 மில்லியன் வெள்ளி போதுமா என்றும் டாக்டர் சத்தியபிரகாஷ் கேள்வி தொடுத்துள்ளார்.

அப்படியே மருத்துவ மையம் கட்டுவதானால் அவர் சார்பில் ஒரு மருத்துவர் இருக்க வேண்டும், அப்படி இல்லையே.

கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் தன்னிடம் பணத்தைப் பெற்ற ஓம்ஸ் தியாகராஜன் மறு ஆண்டான 2022ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் வரையில் திருப்பிச் செலுத்தினார்.

ஒரே மாதத்தில் 80,000 வெள்ளி, 200,000 வெள்ளி கூட செலுத்தியுள்ளார்.

நான் கடந்த 15 வருடங்களாக வழிநடத்தி வரும் எஸ்பிகேர் நிறுவனத்திடம் அந்தத் தொகையை அவர் செலுத்தினார்.

இந்த நிறுவனத்தை எனது பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு குடும்பமாக வழிநடத்தி வருகிறேன்.

ஓம்ஸ் தியாகராஜன் என்னோடும், எனது பெற்றோருடனும் அணுக்கமான உறவை வைத்திருந்தார். அவர் மீது நான் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன். ஆனால் அண்மைய காலமாக அவர் நடந்து கொண்ட விதம் உண்மையில் அநாகரிகமான முறையாகும் என்பதை இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் சத்தியபிரகாஷ் குறிப்பிட்டார்.

8 முறை அவர் என்னை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அந்த சந்திப்பின் போது அவர் வைத்த கோரிக்கைகள் இவைதான் என்று டாக்டர் சத்தியபிரகாஷ் கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிட்டார்.

புவனேஸ்வரன் நகராண்மைக் கழக உறுப்பினர் மற்றும் தலைமை நகராண்மைக் கழக உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்; பவளச் செல்வம் என்னிடம் வேலை செய்யக் கூடாது. அவர் பயன்படுத்தும் வாகனத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டும். நான் அரசியலில் அருகதையற்ற நபர். அரசியலில் இருந்து விலகிவிட வேண்டும். இந்த 3 விவகாரங்களைத்தான் அவர் 8 தடவையும் கூறியுள்ளார்.

நடுநிலையான ஒரு இடத்தில் பேச்சு நடத்துவோம் என்று கூறி அவருக்குத் தெரிந்த ஓரிடத்தில் அழைத்துச் சென்று பேசினார். ஆனால் அந்த சமயத்தில் கோல குபு பாரு இடைத்தேர்தல் நடைபெறும் கால கட்டம் என்பதால் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு நான் அமைதி காத்தேன். ஆனால் அவர் எனக்கு எதிராகப் பல அவதூறுகளைத் தொடுத்து வருகிறார். இதற்கு எதிராக நான் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளேன் என்றார் டாக்டர் சத்தியபிரகாஷ்.