spot_img
11.1 C
London
spot_img
Home சமூகம் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்பு தொடரப்படும்! -அமைச்சர் பாட்லினா சீடேக்

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்பு தொடரப்படும்! -அமைச்சர் பாட்லினா சீடேக்

0
156

நிபோங் திபால், ஜூலை 5-

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்பு திட்டத்தைத் தொடர்வதில் கல்வி அமைச்சு உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டம் தற்போது மீட்டெடுக்கும் செயல்பாட்டில் உள்ளது. மாநில கல்வி இலாகா மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் ஆவணங்களைப் புதுப்பிப்பதும் அடங்கும் என்று அமைச்சர் பாட்லினா சீடேக் கூறினார்.

இப்பள்ளியின் நிர்மாணிப்புத் திட்டம் நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ளது. நிலம், கடன் விவகாரங்கள் உட்பட ஏராளமான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

எனினும், இந்த கட்டுமான திட்டத்தைப் பூர்த்தி செய்வதில் அமைச்சு முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளது என்று சுங்கை பாக்காப் போலீஸ் நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற அமைச்சருடனான ஒன்றுகூடல் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய போது நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்லினா இவ்வாறு குறிப்பிட்டார்.

-பெர்னாமா