spot_img
13.6 C
London
spot_img
Home சமூகம் எஸ்.பி.எம் தேர்வு: சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள்! துணையமைச்சர் தியோ நி சிங் வழங்கினார்

எஸ்.பி.எம் தேர்வு: சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள்! துணையமைச்சர் தியோ நி சிங் வழங்கினார்

0
222

கூலாய், ஜூலை 11-

2023 எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற கூலாய் நாடாளுமன்றத்தில் உள்ள 62 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

எஸ்பிஎம் தேர்வி்ல் சிறப்பான அடைவுநிலையைப் பெற்ற மாணவர்களின் கடின உழைப்பைப் பாராட்டுவதும், அடுத்து இத்தேர்வை எழுதவிருக்கும் எஸ்பிஎம் மாணவர்களை ஊக்குவிப்பதும் இவ்விழாவின் நோக்கம் என இதனை ஏற்பாடு செய்த கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நி சிங் தெரிவித்தார்.

2023 எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற கூலாய் நாடாளுமன்ற மாணவர்களைப் பாராட்டும் விழா மாவட்ட கல்வி அலுவலகத்தின் ஒத்துழைப்போடு நடைபெற்றது.

இதில் செனாய் சட்டமன்ற உறுப்பினர் வோங் போர் யாங், புக்கிட் பத்து சட்டமன்ற உறுப்பினர் ஆர்தர் சோங் சென் செர்ன், கூலாய் மாவட்ட கல்வி அலுவலக அதிகாரி ஹாஜி முகமட் கமால் அகமட் உண்டோங் மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

மடிக்கணினிகளைப் பரிசாகப் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இவ்விழாவை வரவேற்றனர். தொடர்ந்து கூலாய் நாடாளுமன்றத்தில் சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கௌரவிப்பு தொடரப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினர்.

கூலாயில் உள்ள மாணவர்களிடையே சிறந்து விளங்கும் முயற்சியைத் தொடர்ந்து வளர்க்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் தொடரலாம் என தொடர்பு துணையமைச்சருமான தியோ நம்பிக்கைத் தெரிவித்தார்.