Homeமலேசியாஇந்திய வணிகர்களுக்கு வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு !   தெக்குன் நடவடிக்கைக்கு -நிவாஸ்...

இந்திய வணிகர்களுக்கு வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு !   தெக்குன் நடவடிக்கைக்கு -நிவாஸ் ராகவன் பாராட்டு 

கோலாலம்பூர், ஜன. 15-இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக தெக்குன் 100 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த முயற்சியை முன்னெடுத்த தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் பாராட்டினார்.

அதே வேளையில், இந்தியர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சர் இவோன் பெனடிக் வற்றாத ஆதரவைத் தொடர்ந்துவழங்கி வருவதையும் நிவாஸ் சுட்டிக் காட்டினார்.

இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் முன்னேற்றம் காண்பர் என்று அறிக்கை ஒன்றின் வழி நிவாஸ் குறிப்பிட்டார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் இந்திய சமூக தொழில் முனைவர் மேம்பாட்டு திட்டம்(ஸ்பூமி) தொடங்கப்பட்டது முதல் இத்திட்டத்திற்காக 50 மில்லியன் வெள்ளி, ஸ்பூமி கோஸ்பிக் திட்டத்திற்காக 50 மில்லியன் வெள்ளி என இவ்வாண்டு மிகப் பெரிய தொகையாக 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் வழி சுமார் 4,500 இந்திய சிறு வியாபாரிகள் தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டிலுள்ள இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு வழிகாட்டி கருத்தரங்கம், மேம்பாடு & பயிற்சி திட்டங்கள் உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வ திட்டங்களை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனம் மேற்கொண்டு வருகிறது.

 

spot_img

latest articles

explore more