Homeசமூகம்அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு அளப்பரியது!  டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனின் மகளிர் தின வாழ்த்து

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு அளப்பரியது!  டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனின் மகளிர் தின வாழ்த்து

கோலாலம்பூர்,மார்ச் 7- உலகம் தொழில்நுட்பத்தை நோக்கி மாறிக் கொண்டிருக்கும் நிலையில் உலகில் ஒரு பெண் தன்னை பல்வேறு வழிகளில் வளர்த்துக்கொண்டு பீடுநடை போட்டு வருவது கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக மஇ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பெண்களுக்கு நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் அவசியம்.எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தன் திறமைகளை முழுமையாக அறிந்து, வெளிப்படுத்தும் பெண்ணே வெற்றி பெற முடியும் என்று மகளிர் தின வாழ்த்து செய்தியில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

பெண்கள் பொருளாதார நிலைத்தன்மை பெற தனது தனிப்பட்ட தேவைகளுக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் கூட உதவ வலுவுடன் இருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகள், தொழில்முனைவர், முதலீடு உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.பெண்கள் கற்றல் விவகாரத்தில் ஓய்ந்துவிடக்கூடாது.

அறிவை வளர்த்துக் கொள்ள தொடர்ந்து கற்றுக்கொள்வதே ஒரு பெண்ணின் முதன்மையான கடமை. பெண்களுக்கு எதிலும் சுயமேம்பாடு தேவை என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு பெண் தனது சமூகத்தில் உரிய இடத்தை பிடிக்க பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் உரிமைக்காக குரல் எழுப்புகின்றனர்.

குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஆதரவாக இருந்து வரும் பெண்களை மகளிர் தினத்தில் மட்டுமன்றி எல்லா காலத்திலும் போற்ற வேண்டும் என்று விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

உலகளவில் மார்ச் 8ஆம் தேதி அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினத்தை உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாட அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டார்.

 

spot_img

latest articles

explore more