Homeமலேசியாவருமான வரி வாரியம் கடந்தாண்டு வெ. 184.805 பில்லியன் வசூல்  -பிரதமர்

வருமான வரி வாரியம் கடந்தாண்டு வெ. 184.805 பில்லியன் வசூல்  -பிரதமர்

சைபர்ஜெயா, மார்ச்10-உள்நாட்டு வருமான வரி வாரியம் (எல்எச்டிஎன்) கடந்தாண்டு 184.805 பில்லியன் வெள்ளியை வசூல் செய்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

முந்தைய ஆண்டில் 183.3 பில்லியன் வெள்ளி வரி இவ்வாரியத்தால் வசூலிக்கப்பட்டதை பிரதமர் சுட்டிக் காட்டினார் .

இந்த 1.465 பில்லியன் வெள்ளி கூடுதல் வரி வசூலிப்பானது வரி செலுத்தாமல் யாரும் தவறிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் இவ்வாரியம் கொண்ட கடப்பாட்டையே காட்டுகிறது என்று இவ்வாரியத்தின் 29 ஆவது வசூல் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய போது அன்வார் குறிப்பிட்டார்.

”இந்தக் கூடுதல் வரி வசூலிப்பின் வழி எந்தவொரு தரப்பினர் குறிப்பாக பணக்கார வர்க்கத்தினரிடம் விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைபிடிக்காத வாரியத்தின் உறுதிநிலை மற்றும் கடப்பாடு தெளிவாகிறது ” என்றார்.

“நிதியமைச்சர் எனும் வகையில் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தரப்பினரிடம் பாரபட்சமுடன் நடந்து கொள்ளும்படி எல்எச்டிஎன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடினுக்கு எவ்வித நெருக்குதலையும் நான் கொடுத்ததில்லை”என்றார் பிரதமர்.

 

 

 

spot_img

latest articles

explore more