Homeகுற்றவியல்பெங் ஹோக் மரணத்திற்கு மன்னிப்பு கோரியது எம்ஏசிசி! 

பெங் ஹோக் மரணத்திற்கு மன்னிப்பு கோரியது எம்ஏசிசி! 

புத்ரா ஜெயா, ஜூலை 16-

பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் தியோ பெங் ஹோக்கின் சடலம் ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணைய கட்டடத்தில் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் சம்பந்தமாக அவரின் குடும்பத்தாரிடம் ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி)   மன்னிப்பைக் கோரியது.

அச்சம்பவமானது எம்ஏசிசியின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்றும் பெங் ஹோக்கை இழந்து துயருரும் அவரின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

அம்மாதிரியான நடவடிக்கை மேலும் தொடராமல் இருக்க தமது ஆணையம் தகுந்த உருமாற்றத் திட்டங்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதி கூறினார்.

பெங் ஹோக்கின் மரணத்தில் ஒருவருக்கு மேற்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக மேல் முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டிருந்த வேளையில், சட்டத்துறை அலுவலகம் அதில் தகுந்த ஆதாரம் இல்லையென்பதால் அவ்வழக்கை மேற்கொண்டு விசாரிக்கத் தேவையில்லையென்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-பொன் முனியாண்டி

spot_img

latest articles

explore more