Homeஅரசியல்கால் நூற்றாண்டுக்குப் பின்னர் அம்னோ தலைமையகத்தில் அன்வார்!

கால் நூற்றாண்டுக்குப் பின்னர் அம்னோ தலைமையகத்தில் அன்வார்!

கோலாலம்பூர், பிப்.7-
அம்னோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இங்குள்ள அம்னோ தலைமையகத்திற்கு இன்று வருகை புரியவிருக்கிறார்.

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் அரசாங்க கட்சிகளை உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்க செயலகத்தின் முதலாவது கூட்டத்திற்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமை ஏற்பார் என்று கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் அன்வார் கலந்து கொள்வார் என்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அஸ்ராஃப் டுசுக்கி மலேசியா கினியிடம் உறுதிப்படுத்தினார்.

அதே வேளையில், இக்கூட்டத்தில் ஜசெகவின் வரவும் அநேகரின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செயலகத்தின் நிர்வாக அலுவலகமாக அம்னோ தலைமையகம் செயல்படும்.

அரசியல் ஒத்துழைப்பு மற்றும் ஆளும் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும்  திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்த செயலகம் அமைக்கப்பட்டுள்ளது.

மற்ற ஆளும் கட்சிகளைச் சந்திப்பதற்கு முன்பு பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் ஒன்று கூடி சந்திப்பு நடத்துவர்.

spot_img

latest articles

explore more