Homeசமூகம்வாகனங்களில் இனிசாலை வரி வில்லையை காண்பிக்கத் தேவையில்லை!

வாகனங்களில் இனிசாலை வரி வில்லையை காண்பிக்கத் தேவையில்லை!

கோலாலம்பூர், பிப்.10-

இன்று முதல் மலேசியர்களுக்குச் சொந்தமான தனி நபர் வாகனங்களில் சாலை வரி வில்லைகளை காட்சிக்கு வைக்கத் தேவையில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

    

சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜேபிஜே) மோட்டார் வாகன லைசென்ஸ் (எல்கேஎம்) மற்றும் மலேசிய வாகன லைசென்ஸ் (எல்எம்எம்) சம்பந்தப்பட்ட முதன்மை சேவையில் இலக்கவியலை அறிமுகப்படுத்தும் போக்குவரத்து அமைச்சின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது என்றார் அவர்..

“2023 பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் உள்நாட்டினராக இருக்கும் தனிநபர் வாகனங்களின் உரிமையாளர்கள்  ஜேபிஜே அகப்பக்கம் வாயிலாக எல்கேஎம் டிஜிட்டல் (இ-எல்கேஎம்) மற்றும் எல்எம்எம் டிஜிட்டல் (இ- எல்எம்எம்) முறையைப் பயன்படுத்தலாம் என்று அறிக்கை ஒன்றின் வழி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில், சாலை போக்குவரத்து சட்டம் செக் ஷன் 20 இன் கீழ் சாலை வரி வில்லைகளைக் காண்பிக்கும் முறை இனி நடப்பில் இருக்காது என்றார் அமைச்சர்.

“இது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும்.வாகனமோட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் அனைவரும் டிஜிட்டல் முறைக்கு மாறுவதை நான் வரவேற்கிறேன்” என்று லோக் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more