‘
கோலாலம்பூர், பிப். 28-
ராகா இரசிகர்கள் இப்போது முதல் மார்ச் 17 வரை ‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 2.0’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று ரிம1000 வரை ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞையைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைபேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.
போட்டியாளர்கள் மொத்தம் மூன்று சுற்றுகளில் பங்கேற்பர். முதல் சுற்றில், பின்னணியில் சத்தத்துடன் ஒரு பாடல் துணுக்கு ஒலியேற்றப்படும். பங்கேற்பாளர்கள் அப்பாடலின் தலைப்பை 5 வினாடிகளுக்குள் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.
முதல் பதிலைச் சரியாக யூகித்தப் பங்கேற்பாளர்கள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்தச் சுற்றுக்கு முன்னேற விரும்பாத முதல் பதிலைச் சரியாக யூகித்தப் பங்கேற்பாளர்கள் ரிம100 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
இரண்டாம் சுற்றுக்குத் தகுதிப் பெறும் பங்கேற்பாளர்களுக்குத் தலைகீழாக மாற்றப்பட்டப் பாடல் துணுக்கு ஒலியேற்றப்படும். . பங்கேற்பாளர்கள் அப்பாடலின் தலைப்பை 10 வினாடிகளுக்குள் சரியாக யூகித்துக் கூற வேண்டும். இறுதிச் சுற்றுக்கு முன்னேற விரும்பாதப் பதிலைச் சரியாக யூகித்தப் பங்கேற்பாளர்கள் ரிம300 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
இறுதிச் சுற்றில், பங்கேற்பாளர்களுக்கு இரண்டு பாடல்களின் கலவையானத் துணுக்கு ஒலியேற்றப்படும் மற்றும் அவ்விரண்டு பாடல்களின் தலைப்புகளைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும். பதிலைச் சரியாக யூகித்தப் பங்கேற்பாளர்கள் ரிம1000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 2.0’ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின் தொடர்க


