Homeகலை உலகம்ஆஸ்ட்ரோ வானவில்லில் (அலைவரிசை 201) ‘எங்க வீட்டு செஃப்’ சமையல் நிகழ்ச்சி!

ஆஸ்ட்ரோ வானவில்லில் (அலைவரிசை 201) ‘எங்க வீட்டு செஃப்’ சமையல் நிகழ்ச்சி!

கோலாலம்பூர், மார்ச்  4–
  ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் மார்ச் 3 ஆம் தேதி முதல்  ஒளிபரப்பு காணத் தொடங்கியது பாரம்பரிய இந்தியச் சமையல் மற்றும் இனிப்பு வகைகளைச் சித்தரிக்கும் எங்க வீட்டு செஃப் எனும் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சி.

வெள்ளிதோறும் இரவு மணி 7.30க்கு ஒளிபரப்பு காணும் இந்த 25 அத்தியாயச் சமையல் நிகழ்ச்சியில் டேனேஸ் குமார், மூன் நிலா, தேவகுரு, புனிதா ராஜா, ஸ்ரீ குமரன் மற்றும் பல புகழ்பெற்ற உள்ளூர் பிரபலங்கள் இடம்பெறுவர்.

இந்த திறமையாளர்கள் தங்களது தாய், மாமியார், சகோதரி மற்றும் அவர்களின் இதயங்களுக்கு நெருக்கமான  பிற நபர்களுடன் இடம்பெறுவர். தங்களது தனித்துவமானச் சமையல் பாணியைப் பயன்படுத்திச் சுவையான உணவுகளைச் சமைப்பர்.

இரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சமையல் குறிப்புகளையும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கலாம்.

எங்க வீட்டு செஃப்-இல், விருந்தினர்கள் ‘பெர்ன்லீஃப் பாலைப்’ பயன்படுத்திப் பாரம்பரிய இந்திய உணவுகளைச் சமைப்பர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பிடித்தப் பாரம்பரிய இந்திய உணவு வகைகளையும் சமைப்பர். உள்ளூர் இனிப்புகளையும் தயார் செய்வர்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாலாம்

spot_img

latest articles

explore more