Homeகலை உலகம்அஸியாத்தா அரங்கை கலக்கப் போகும் சந்தோஷ் நாராயணனின் 'சவுண்ட்ஸ் ஆஃப் த சவுத்'

அஸியாத்தா அரங்கை கலக்கப் போகும் சந்தோஷ் நாராயணனின் ‘சவுண்ட்ஸ் ஆஃப் த சவுத்’

கோலாலம்பூர், மார்ச் 7-
‘சவுண்ட் ஆஃப் சவுத்’ இசை நிகழ்ச்சி வழி தனது பாடகர்கள் குழுவினருடன் மலேசிய ரசிகர்களைக் கலக்க வைக்கத் தயாராகி வருகிறார் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

முதன் முறையாக சந்தோஷ் நாராயணன் மலேசியாவில்  படைக்கும் இந்த இசை நிகழ்ச்சி இம்மாதம் 18 ஆம் தேதி மாலை மணி 6.00க்கு தலைநகர், புக்கிட் ஜாலில் அஸியாத்தா அரங்கில் நடைபெறவிருக்கிறது.

இதில் இவரோடு தீ, துருவ் விக்ரம், ஹரிசரண், சூப்பர் சிங்கர் பிரியங்கா, அனந்து, விஜய் நரேன், கானா முத்து, மீனாட்சி இளையராஜா, நடிகர் சித்தார்த், அதித்தி ராவ் முதலானோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

3 டி தொழில்நுட்பத்தோடு நவீன ஒலி, ஒளியமைப்புடன் கூடிய இந்த இசை  நிகழ்ச்சியில் தனது  இசையில் மலர்ந்த பல புகழ்ப்பெற்ற பாடல்களை சந்தோஷ் நாராயணன் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ரஞ்சித்தின் அட்டக்கத்தி திரைப்படம் வழி ஓர் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இதனையடுத்து, இவர் இசையமைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா, மலேசியாவில் படமாக்கப்பட்ட கபாலி ஆகிய திரைப்படங்கள் உலகளாவிய நிலையில் ரசிகர்களைக் கவர்ந்தன.

இவரின் இசையில் தனித்துவம் என்பது இவர் தேர்ந்தெடுக்கும் குரல்களில் உள்ளது என்பது பாடல்களைக் கேட்கும்போது தெரிந்து கொள்ளலாம்.

அவ்வகையில் சந்தோஷ் நாராயணனின் ‘சவுண்ட் ஆஃப் சவுத்’ ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் மனநிறைவை ரசிகர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்று  இதன் ஏற்பாட்டாளர்களான ரீச் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் இயக்குநர்கள் யுகேஸ்வரன், சுரேஷ் இருவரும் தெரிவித்தனர்.

spot_img

latest articles

explore more