கோலாலம்பூர், நவ. 10-
தீபாவளி சிறப்பு டெலிமூவி தயாரிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணலை இங்கு காண்போம்.
- நந்தினி கணேசன், தயாரிப்பாளர், கனவு மெய்ப்படும்
இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தயாரித்த அனுபவம் எவ்வாறு இருந்தது மற்றும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வாடிக்கையாளர்கள் என்ன எதிர்ப்பார்க்கலாம்?
ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தயாரிப்பதுச் சவாலானதாக இருக்கலாம். ஏனெனில், தொடர் அல்லதுத் திரைப்படம் போல முழுமையான ஸ்கிரிப்ட் எழுதி அதனை இயக்க முடியாது. கனவு மெய்ப்படும் நிகழ்ச்சியைத் தயாரித்தது ஓர் உணர்வுப்பூர்வமானப் பயணம் என்றுதான் கூறுவேன். ஆரம்ப நிலையில் கனவுக் காண்பவர்களை நேர்காணல் செய்தப் போது நாங்கள் உணர்ந்தக் கனமானத் தருணத்தையும் அவர்களின் கனவு மெய்ப்படும் போது நாங்கள் அடைந்த மிகுந்த மகிழ்ச்சியையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சிலர் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக் கூடத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற முடியாமல் இருப்பதால் இந்த நிகழ்ச்சியைக் காணும் வாடிக்கையாளர்கள் சற்று உணர்ச்சிவசப்படுவதோடுத் தங்களிடம் உள்ள வசதிகளுக்கு நன்றி பாராட்டுவர். வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி, யாரோ ஒருவர் தங்கள் கனவுகளை அடைவதைக் காண்பதுதான். - நசிரா இப்ராஹிம், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், மாங்கல்யம்
இந்தக் காதல் நாடக டெலிமூவியை உருவாக்கியதற்கான உத்வேகம் என்ன மற்றும் வாடிக்கையாளர்கள் எதை எதிர்ப்பார்க்கலாம்?
மாங்கல்யம் டெலிமூவியின் இயக்குநராக, நான் உட்படப் பலரை ஆழமாகப் பிரதிபலிக்கும் கதையை உருவாக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் காதல் நகைச்சுவை மற்றும் நகைச்சுவைத் திரைப்படங்களின் தீவிர ரசிகை. மேலும், இந்த டெலிமூவியில் இடம்பெரும் மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் மனதைக் கவரும் தருணங்களைத் தேடும் இரசிகர்களிடையேப் பெருமையுடன் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். அன்பும் நகைச்சுவையும் நம் அனைவரையும் இணைக்கும் உலகளாவிய மொழிகள் என்பதை நினைவூட்டி, நம் நாட்களைப் பிரகாசமாக்கும் குறிப்பிடத்தக்கத் திறனையும் அவைப் பெற்றுள்ளன. மனித உணர்வுகளின் செழுமையானத் திரைச்சீலையைச் சார்ந்து இந்தக் காதல் டெலிமூவி, மாங்கல்யம் உருவாக்கப்பட்டது. காதல், அதன் அனைத்து வடிவங்களிலும், எப்போதும் கதைக்கூறளில் ஒரு கட்டாயச் சக்தியாக இருந்து வருகிறது. மேலும், இந்த டெலிமூவி இயக்கப்பட்டதற்கான அடித்தளமும் அதுதான். துன்பங்களை எதிர்கொள்ளும் போது உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள், ‘இரண்டாம் வாய்ப்பின்’ சக்தி மற்றும் மனிதரின் சகிப்புத்தன்மை ஆகியவற்றை இந்த டெலிமூவி ஆராய்கிறது. கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையின் மூலம் ஓர் ஆழமானப் பயணத்தை இரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம். இணைவதற்கான அழகான, இதயப்பூர்வமானத் தருணங்கள் மற்றும் நம்மைச் சிரிக்க வைக்கும் பெருங்களிப்புடைய, அன்பான நிகழ்வுகளை இரசிகர்கள் கண்டு மகிழ்வர். சிரிப்பு மற்றும் கண்ணீருக்கு அப்பால், காதல், அதன் அனைத்து வடிவங்களிலும், தடைகளைத் தாண்டி, மிகவும் எதிர்பாராத மற்றும் மகிழ்ச்சியான வழிகளில் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்தி என்பதை நினைவூட்டுவதை மாங்கல்யம் நோக்கமாகக் கொண்டுள்ளது. காதல் மற்றும் சிரிப்பு ஆகியவற்றின் உலகளாவியக் கருப்பொருளை இந்த டெலிமூவிக் கொண்டாடுகிறது. மேலும், எங்களின் ஆர்வத்தை டெலிமூவியின் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிப்பலித்துள்ளோம். இரசிகர்களிடையே பகிரப்பட்ட அனுபவமாக மாறுவதோடு உரையாடல்களையும் இந்த டெலிமூவித் தூண்டும். சிரிப்பிலும் கண்ணீரிலும் கூட ஆழ்த்தும். மனிதரின் நெகிழ்ச்சியை ஆய்வுச் செய்வதோடு அன்பு, நகைச்சுவை மற்றும் நம்பிக்கை ஆகியவை நமதுப் பகிரப்பட்ட மனிதநேயத்தின் மையம் என்பதை நம் அனைவருக்கும் நினைவூட்டுகிறது, மாங்கல்யம். - பால கணபதி வில்லியம், தொகுப்பாளர், ரசிக்க ருசிக்க தீபாவளி ஸ்பெஷல்
ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் இரசிப்பார்கள் என நீங்கள் எண்ணும் இந்த உணவுப் பயணத் தொடரின் சிலச் சிறப்பு அம்சங்கள் யாவை?
நல்ல உணவுக் கொண்டாட்டத்தைப் பிரதிப்பலிக்கிறது. கொண்டாட்டம் நிறைந்த ஒரு நாளுடன் நல்ல உணவும் சேர்ந்தால் என்ன ஆகும்? அதுதான் ரசிக்க ருசிக்க தீபாவளி ஸ்பெஷல். தீபாவளியின் போதுக் காலை உணவு, மதிய உணவு, தேநீர் மற்றும் இரவு உணவு ஆகியவற்றை வேறு சில உள்ளூர் பிரபலங்களுடன் உண்டு மகிழ வாய்ப்புக் கிடைத்தது. கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி.
- ஜோசுவா மைக்கல், இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் முன்னணி நடிகர், படப்
இந்த நகைச்சுவை நாடகத் தொடரை இயக்கித், தயாரித்து மற்றும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவம் எவ்வாறு இருந்தது?
மலேசியா மட்டுமின்றி இந்தியாவின் சென்னையையும் சித்தறிக்கும் ஒரு நகைச்சுவைத் தொடரை இயக்கியது நிச்சயம் மிகப்பெரியப் பணியாகும். இரு நாடுகளிலிருந்தும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை நிர்வகிப்பது ஒரு மகத்தான முயற்சியாகும். திறமை மற்றும் மிக முக்கியமாக வேலை செய்யும் பாணிகளுக்கு ஏற்றவாறுச் சிலவற்றை மாற்றியமைக்க வேண்டியும் இருந்தது. ஓர் இயக்குநராக, நான் எனது முதல் வீடியோவை உருவாக்குவது போல் உணர்ந்தேன். சில மாதங்களில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். மறுபுறம், ஒரு நடிகரின் தொப்பியை அணிவது மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில் ஒரு தொடரை இயக்குதல் மற்றும் தயாரித்தல் ஆகியவற்றின் அழுத்தம் முக்கியக் கதாப்பாத்திரத்தின் முகத்தில் பிரதிபலிக்காமல் இருப்பதை நான் உறுதிச் செய்ய வேண்டியிருந்தது – இது சற்றுச் சவாலாக இருந்தது. பல இடங்கள் மற்றும் அட்டவணைகளை உள்ளடக்கியதால், ஒரு தயாரிப்பாளராகத் தயாரிப்புச் செலவுகளை நிர்வகிப்பதில் தொடர்ச்சியானப் போராட்டங்களை நான் நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போதுத் தயாரிப்பின் தரத்தில் சமரசம் செய்யாமலிருப்பது உறுதிச் செய்யப்பட்டது. படப் நிச்சயமாக மலேசியத் தமிழ் தொடர் வரிசையில் புதிய வரையறைகளை அமைக்கும். முழுமையாகச் சமூக ஊடக உள்ளடக்கத் தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் தொடர் என்றும், 13 அசல் பாடல்களை உள்ளடக்கிய முதல் உள்ளூர் தமிழ் தொடர் என்றும், சென்னை, இந்தியாவில் படப்பிடிப்புச் செய்யப்பட்ட முதல் உள்ளூர் தமிழ் தொடர் என்றும் பெருமையைப் பெற்றுள்ளது – படப் அதன் தொழில்நுட்பத் தரத்திற்க்கும் தனித்துவமானக் கதைக் கூறளுக்கும் நிச்சயமாகப் பேசப்படும். ஒரு தயாரிப்பாளராக, இயக்குநராக, எழுத்தாளராக, மற்றும் முன்னணி நடிகராக இருப்பதால், ஓர் உண்மையான மலேசியத் தயாரிப்பு எப்படி இருக்கும் என்பதைக் காட்ட எனது வாழ்நாளில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. வருங்காலத்தில் அனைத்து உள்ளூர் தமிழ் தொடர்களுக்கும் படப் மிகச்சிறந்த வரையறைகளை அமைக்கும் என்று நான் நம்புகிறேன்.