‘தமிழ் பேசு ஜெயிக்கலாம் காசு’ ராகா வானொலி போட்டியில் பங்கேற்று ரொக்கப் பரிசுகளை வெல்லுங்கள்!

166

கோலாலம்பூர், பிப். 21-
ராகாவில் ஒலிபரப்பாகும் ‘தமிழ் பேசு ஜெயிக்கலாம் காசு’ போட்டியைப் பற்றிய சில விபரங்கள்

ராகா ரசிகர்கள் இப்போது முதல் பிப்ரவரி 23 வரை ‘தமிழ் பேசு ஜெயிக்கலாம் காசு’’ எனும் வானொலி போட்டியில் பங்கேற்று ரிம100 ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

வானொலி அல்லது ‘SYOK’ செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் குறிப்பிட்ட அழைப்புக்கான சமிஞ்ஞையைக் கேட்டவுடன் 03-95430993 எனும் தொலைபேசி எண் வாயிலாக ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் போட்டியில் பங்கேற்க முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

அதிர்ஷ்டசாலியான பங்கேற்பாளர்கள் வெற்றி பெற அறிவிப்பாளரால் வழங்கப்படும் “பழமொழியைப்” பத்து வினாடிகளுக்குள் முழுமையாகக் கூற வேண்டும்.

சரியான பதிலைக் கூறும் பங்கேற்ப்பாளர்கள் ரிம100 ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். இருப்பினும், கொடுக்கப்பட்ட பதில் தவறாக இருந்தால், பரிசுத் தொகை அடுத்த சுற்றுக்குப் பனிப்பந்தாகும்.
மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.”