spot_img
8.9 C
London
spot_img
Home சமூகம் வயோதிகர்களைப் பாதுகாக்க அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் யாவை? – மக்களவையில் டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி

வயோதிகர்களைப் பாதுகாக்க அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் யாவை? – மக்களவையில் டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி

0
260

கோலாலம்பூர் மார்ச்- 14

நாட்டில் வயோதிகர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எத்தகைய திட்டங்களை வகுத்துள்ளது? அப்படி இல்லையெனில் அதற்கான பிரத்தியேக திட்டத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மக்களவையில் கேட்டுக் கொண்டார்.

நடப்பு சமூகநல சட்டம் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்குகிறது. வரும் 2030ஆம் ஆண்டில் அதிகமான முதியோர்கள் வாழும் நாடாக மலேசியா விளங்கும். அப்போது இச்சாராரைப் பாதுகாக்க அரசாங்கம் சிறப்பு திட்டங்களைக் கொண்டுள்ளதா? அப்படி இல்லையென்றால் இத்திட்டத்தை மேற்கொள்ள விரிவான ஆய்வு தேவை என்று டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

நடப்பு தொழிலாளர்கள் வயதான பின்னர் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகையால், இவ்விவகாரம் குறித்து இப்போதே ஆய்வு செய்வது இவர்களின் எதிர்கால நலனைப் பாதுகாக்க உதவும் என்று மக்களவையில் வயோதிகர்களுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து துணைக் கேள்வி ஒன்றின் வழி மனித வள அமைச்சிடம் வினவியபோது சரவணன் குறிப்பிட்டார்.