8 பிளேக் பால் சூப்பர் கப் பிளேக் போட்டியில் வெற்றி பெறும் குழுக்களுக்கு வெ.55,000 ரொக்கப் பரிசு

76

பண்டார் சன்வே, மே 1-

கேஎஸ்எஸ் ஸ்போர்ட்ஸ் இவெண்ட் மேனேஜ்மென்ட் ஏற்பாட்டில் மாபெரும் 8 பிளேக் பால் சூப்பர் பிளேக் கிண்ண போட்டி வரும் 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.

பிரிட்டீஷ் ஃபூல் என்றழைக்கப்படும் இந்த போட்டியானது எட்டு கறுப்பு பந்து என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

முதலாவது குழுப் பிரிவில் 26 குழுக்கள் கலந்து கொள்கின்றன.

மூன்று ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் பிரிவில் குழுப் போட்டி நடத்தப்படுகிறது.

நான்கு பிரிவுகளில் லீக் பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறும் குழுக்கள் டிவிஷன் 1க்கு தேர்வு பெறும்.

டிவிஷன் 1 பிரிவில் வெற்றி பெறும் குழுக்களுக்கு 35,000 வெள்ளி ரொக்கப் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது.

டிவிஷன் 2 பிரிவில் வெற்றி பெறும் குழுக்களுக்கு 20,000 வெள்ளி காத்துக் கொண்டிருக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 15,000 வெள்ளி ரொக்கமும் பெண்கள் பிரிவில் 7,000 வெள்ளி ரொக்கமும் வழங்கப்படும்.

இவ்வாண்டு போட்டியில் மொத்தம் 210 விளையாட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் சேம் சதீஷ் குமார் தெரிவித்தார்.

நான்கு மாதங்களுக்கு நடத்தப்படும் இந்த போட்டியின் மாபெரும் இறுதி சுற்று லேக் வியூ சுபாங்கில் நடத்தப்படும் என்றார்.

இன்று நடைபெற்ற சிறப்பு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மலேசிய பில்லியர்ட்ஸ் சங்கத்தின் தலைவர் எல்வின் சியா, மைக்கல் டான் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.