spot_img
9.4 C
London
spot_img
Home சமூகம் எஸ்பி கேர் நிறுவனத்திடம் பெற்ற வெ.1 லட்சத்தை திருப்பித் தாருங்கள் ! – ஓம்ஸ் தியாகராஜனுக்கு...

எஸ்பி கேர் நிறுவனத்திடம் பெற்ற வெ.1 லட்சத்தை திருப்பித் தாருங்கள் ! – ஓம்ஸ் தியாகராஜனுக்கு புவனேஸ்வரன் பதிலடி

0
163

கோலாலம்பூர் மே 23-

தங்களுக்கு எதிராக ஓம்ஸ் தியாகராஜன் முன்வைத்த அவதூறுகளுக்கு எதிராக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் புவனேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார் .

எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பத்திரிகையில் பெரியளவில் செய்தியைப் போடும் இவர், தான் செய்த சில்லறைத்தனமான வேலைகளைப் பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏன் என்று புவனேஸ்வரன் வினவினார்.

“கடந்த 19ஆம் தேதி தமிழ் மலர் நாளிதழில் என்னுடைய, பவளச் செல்வம், மலேசியா கினி நந்தகுமார் ஆகியோரின் புகைப் படங்களோடு 2 பக்கங்களுக்குச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில் கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதிக்கு டாக்டர் சத்திய பிரகாஷுக்கு சீட் வாங்கிக் கொடுப்பதற்காக நாங்கள் அவரிடம் 20 லட்சம் வெள்ளி கோரியதாகவும் அதன் பிறகு அவரிடமிருந்து 600,000 ஒப்பந்தம் பேசியதாகவும் ஓம்ஸ் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதே சமயம், நானும் பவளச்செல்வமும் ஏற்கனவே தமிழ் மலரில் ஆட்டையப் போட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து நான் புவனேஸ்வரன், பவளச் செல்வன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் தனித்தனியே போலீஸ் புகார் செய்துள்ளோம்.

இவ்விவகாரம் தொடர்பில் அவர் மீது நாங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறோம் என்று தலைநகரில் பிரபல உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் புவனேஸ்வரன் விவரித்தார்.

8 /9 கூட்டங்களில் நீங்கள் என்ன பேசினீர்கள், என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தீர்கள் என்பதை உங்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? அந்தக் கூட்டங்களிலும் என்னென்ன கோரிக்கைகளை நீங்கள் முன்வைத்தீர்கள் என்பதை நான் இன்று சொல்கிறேன் என்று ஓம்ஸ் தியாகராஜன் முன்வைத்த கோரிக்கைகளை புவனேஸ்வரன் வெளிப்படையாகக் கூறினார்.

புவனேஸ்வரனான எனக்குப் பதிலாக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினராக ஓம்ஸ் தியாகராஜன் தலைவராக இருக்கும் அரிமா சங்கத்தின் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும். பவளச் செல்வம் பயன்படுத்தும் வாகனத்தை டாக்டர் சத்திய பிரகாஷ் மீட்டுக் கொள்ள வேண்டும் போன்றவை அவர் முன்வைத்த கோரிக்கைகளில் அடங்கும் என்றார்.