spot_img
10.7 C
London
spot_img
Home சமூகம் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பீர்! -ஃபாஹ்மி ஃபாட்சில்

ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பீர்! -ஃபாஹ்மி ஃபாட்சில்

0
196

கூச்சிங், மே 24-

தாம் உட்பட அரசியல்வாதிகள் அனைவரும் ஊடகவியலாளர்களின் கடமைகள் மற்றும் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தகவல் மற்றும் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் தமிழ் இணையதள ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசியல்வாதி ஒருவர் விடுத்த மிரட்டல் தொடர்பில் ஃபாஹ்மி இவ்வாறு கருத்துரைத்தார்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்களைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் சரவாக் மாநில ஆளுநர் ஒன் ஜுனைடி துங்கு ஜாஃபாரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

பல தமிழ்மொழி இணைய தள ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசியல்வாதி ஒருவர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஃபாஹ்மி, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இணக்கமான தீர்வைக் காண்பதற்காக இச்சம்பவம் தொடர்பில் கூடுதல் தகவல்களைக் கோரியதாகக் குறிப்பிட்டார்.