spot_img
9.5 C
London
spot_img
Home சமூகம் முன்னாள் செனட்டர் டான்ஸ்ரீ ஸைனால் ரம்பாக் காலமானார்!

முன்னாள் செனட்டர் டான்ஸ்ரீ ஸைனால் ரம்பாக் காலமானார்!

0
173

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4-

முன்னாள் செனட்டரும் மலேசிய தொழிற்சங்க காங்கிரசின் (எம்டியூசி) முன்னாள் தலைவருமான டான்ஸ்ரீ ஸைனால் ரம்பாக் இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 84.

ஸைனால் செலாயாங் பெரிய மருத்துவமனையில் அதிகாலை 2.30 மணிக்கு முதுமை காரணமாக காலமானதாக எம்டியூசியின் தலைமைச் செயலாளர் கமாருல் பாஹாரின் மன்சோர் தெரிவித்தார்.

மலாக்கா, தஞ்சோங் கெலிங்கைச் சேர்ந்த ஸைனாலின் உடல் சுபாங் ஜெயாவிலுள்ள இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எம்டியூசி தலைவராக ஆக்கப்பூர்வ பங்காற்றிய ஸைனால், தொழிலாளர் விவகாரங்களில் நல்ல முறையில் போராடி பல விவகாரங்களுக்கு வெற்றிகரமாகத் தீர்வு கண்டதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது கமாருல் குறிப்பிட்டார்.

-எப்.எம்.டி.