பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4-
அம்னோவிலிருந்து நீக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலான நிலையில், முன்னாள் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ நோ ஒமார் பெர்சத்துவில் இணைந்தார்.
ஆன்லைனில் தாம் செய்த விண்ணப்பம் உடனடியாக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாம் பெர்சத்து உறுப்பினரானதாக நோ ஒமார் தெரிவித்தார்.
“இதுபற்றி யாருக்கும் தெரியாது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்ததில் நான் பெர்சத்து கட்சியின் உறுப்பினர் என்று உடனடியாக அங்கீகார சான்றிதழ் எனக்குக் கிடைத்து விட்டது” என்று செய்தியாளர்களிடம் பேசிய போது சிலாங்கூர் மாநில முன்னாள் அம்னோ தலைவருமான நோ ஒமார் குறிப்பிட்டார்.
நோர் ஒமார் இதற்கு முன்பு 6 தவணைகளுக்கு தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எனினும், கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் தஞ்சோங் காராங் அம்னோ மகளிர் தலைவி ஹபிபா யூசோப்பிற்கு வழி விடும் வகையில் தேசிய முன்னணிக்கான வேட்பாளராகுவதிலிருந்து அவர் விலகினார். இதில் ஹபிபா, பெரிக்காத்தான் வேட்பாளர் டாக்டர் ஸுல்காஃபெரி ஹானாபியிடம் தோல்வியுற்றார்.
-எப்.எம்.டி.